ரீ ரிலீஸாகும் சிம்புவின் ‘குத்து’ திரைப்படம்!

சமீப காலங்களில் 1990கள் மற்றும் 2000களில் வெளியான வெற்றிப் படங்கள் டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் திரையரங்குகளில் வெளியிடப்படும் ‘மறுவெளியீடு’ நடைமுறை அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் ‘கில்லி’, ‘படையப்பா’, ‘மங்காத்தா’, ‘சச்சின்’ மற்றும் ‘3’ போன்ற திரைப்படங்கள் சமீபத்தில் மறுவெளியீடு செய்யப்பட்டு, ரசிகர்களின் பெரும் ஆதரவைப் பெற்று வசூல் சாதனைகளையும் படைத்துள்ளன.

இதனைத் தொடர்ந்து, சிலம்பரசன் நடித்த ‘குத்து’ திரைப்படமும் இந்த மறுவெளியீட்டு பட்டியலில் இணைந்துள்ளது. 2004ஆம் ஆண்டு ஏ. வெங்கடேஷ் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் சிலம்பரசன் மற்றும் ரம்யா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மேலும், இந்த படம் நடிகை ரம்யாவின் முதல் தமிழ்த் திரைப்படமாகும். தெலுங்கில் நிதின் குமார் ரெட்டி மற்றும் நேகா பாம்பு நடித்த ‘தில்’ திரைப்படத்தின் மறுபதிப்பாக ‘குத்து’ உருவாக்கப்பட்டது.

தற்போது, வெளியாகி இருபத்திரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், ‘குத்து’ திரைப்படம் டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் வெளியிடப்பட உள்ளது. வருகிற மே மாதத்தில் இந்தப் படம் திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்படும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால், இந்தப் படத்தை மீண்டும் பெரிய திரையில் காண சிலம்பரசன் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading