திரையுலகில் வெற்றி மற்றும் தோல்வி இயல்பான ஒன்று… தன்னை பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை பூஜா ஹெக்டே!

இந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக திகழும் பூஜா ஹெக்டே, தமிழில் ‘முகமூடி’, ‘பீஸ்ட்’, ‘ரெட்ரோ’ போன்ற படங்களில் நடித்துள்ளார். அதேபோல் ‘கூலி’ திரைப்படத்தில் அவர் ஆடிய ‘மோனிகா’ பாடல் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், பூஜா ஹெக்டே நடித்த அண்மைய திரைப்படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்பதால், அவர் மனஅழுத்தத்தில் இருப்பதாகவும், இதன் காரணமாக சூப்பர் உமன் கதாபாத்திரத்தில் நடிக்கத் திட்டமிட்டுள்ளார் எனவும் சில தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள பூஜா ஹெக்டே, “திரையுலகில் வெற்றி மற்றும் தோல்வி என்பது இயல்பான ஒன்றாகும். நானும் அதனை சமமாகவே ஏற்றுக்கொள்கிறேன். வெற்றியும் தோல்வியும் கடந்து செல்லும் பயணமே என் வாழ்க்கை. எனவே எந்த விஷயமும் என் மனநிலையை பாதிக்காது. வழக்கம்போல் தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறேன். இதர வதந்திகளுக்கு பதில் அளிக்க விருப்பமில்லை,” என்று தெரிவித்துள்ளார்.

தற்போது, பூஜா ஹெக்டே இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் தலா இரண்டு திரைப்படங்களில் நடித்துவருகிறார். மேலும், தமிழில் ஜனநாயகன் திரைப்படத்தில் நடிகர் விஜய் உடன் இணைந்து நடித்ததை நிறைவு செய்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading