குடும்பத்துடன் ஜப்பானில் VIBE செய்யும் நடிகை ஹன்சிகா !

நடிகை ஹன்சிகா மோத்வானி, தமிழ்த் திரைப்படங்களில் சுமார் ஒரு தசாப்த காலத்திற்கு முன்னணி நடிகையாக விளங்கியவர். பின்னர் திரைப்பட வாய்ப்புகள் குறைந்த நிலையில், 2022ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் சோஹைல் கத்தூரியாவை திருமணம் செய்து கொண்டார். ஆனால், அவர்களின் திருமண வாழ்க்கை நான்கு ஆண்டுகளை கூட எட்டாமல், இருவரும் கருத்து வேறுபாடுகள் காரணமாக விவாகரத்து செய்து பிரிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சூழ்நிலையில், இந்த விவாகரத்தால் ஏற்பட்ட மன அழுத்தத்திலிருந்து விடுபட்டு மன அமைதியை பெறும் நோக்கில் ஹன்சிகா தற்போது ஜப்பான் நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அவருடன் அவரது சகோதரரும், தாயாரும் இணைந்து சென்றுள்ளனர். அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டு வருகிறார்.

மேலும் குறிப்பிடத்தக்க விஷயமாக, ஹன்சிகாவின் சகோதரர் பிரசாந்த் மோத்வானியும் தனது திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் 2022ஆம் ஆண்டு முதல் தனியே வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading