சினிமா உலகில் சர்ச்சைகள் என்றாலே உடனடியாக நினைவுக்கு வரும் பெயர்களில் ஒன்றாக பாலிவுட் நடிகை பூனம் பாண்டே உள்ளார். உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கோப்பையை வென்றால் கடற்கரையில் நிர்வாணமாக நடமாடுவேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். ஆனால் இந்திய அணி கோப்பையை வென்ற பின்னர், அவர் அதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து, தனது உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது என தகவல் வெளியிட்டு பின்னர் அது விழிப்புணர்வுக்காக செய்யப்பட்ட செயல் என்று விளக்கம் அளித்தார். இந்நிலையில், தாம் கர்ப்பமாக இருப்பது போல தோன்றும் புகைப்படத்தை அவர் நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
இந்தப் பதிவு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அது எப்படி சாத்தியம்? குழந்தையின் தந்தை யார்? என்ற கேள்விகள் எழுந்தன. ஆனால், ஏப்ரல் 1ஆம் தேதி உலக முட்டாள்கள் தினத்தை முன்னிட்டு ரசிகர்களை ஏமாற்றும் நோக்கில் இந்தப் பதிவை வெளியிட்டது பின்னர் தெரியவந்தது. இதையடுத்து, ரசிகர்கள் பலரும் பூனம் பாண்டே மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.
