ரீ ரிலீஸ் வசூலில் தூள் கிளப்பும் ‘காஞ்சனா’ தெலுங்கு திரைப்படம்!

ராகவா லாரன்ஸ் இயக்கம், நடிப்பில் 2011ல் வெளிவந்த பெரும் வெற்றி பெற்ற படம் ‘காஞ்சனா’. சரத்குமார், ராய் லட்சுமி, கோவை சரளா, தேவதர்ஷினி மற்றும் பலர் நடித்த படம். அப்படம் அப்போதே தெலுங்கிலும் டப்பிங் ஆகி அங்கும் வரவேற்பைப் பெற்றது. சுமார் 7 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட படம் தெலுங்கு டப்பிங் உரிமையாக 4 கோடிக்கு அப்போது விற்கப்பட்டது.சுமார் 15 வருடங்களுக்குப் பிறகு இந்த மாதம் மார்ச் 13ம் தேதி தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆனது. யாரும் எதிர்பார்க்காத விதத்தில் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ந்து ஓடி வருகிறது. தற்போது வரை 5 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading