சூப்பர்கேர்ள் கதையின் புதிய பரிமாணத்தை வெளிப்படுத்தும் வகையில், சூப்பர்கேர்ள் அதிகமான ஆக்ஷன், உணர்ச்சி மற்றும் வித்தியாசமான காட்சிகளுடன் உருவாகியுள்ளது. இத்திரைப்படம் வருகிற ஜூன் 26ம் தேதி, தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்த நிலையில் டிசி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட ஹாலிவுட் திரைப்படமான ‘சூப்பர்கேர்ள்’ படத்தின் அதிரடி தமிழ் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த படத்தின் மூலம் டிசி ஸ்டுடியோஸ் மீண்டும் ஒரு மாபெரும் ஹிட் படத்தை வழங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
Add a Comment
