‘துரந்தர்’ படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்காக கிட்டத்தட்ட 1300 பேரிடம் ஆடிஷன் நடத்தப்பட்டது. கடும் போட்டியில் இறுதியாக தேர்வு செய்யப்பட்டவர் சாரா அர்ஜுன். ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான இந்த படம், சாராவின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்துள்ளது. ஆதித்யா தார் இயக்கத்தில் உருவான இப்படத்தில், சாரா அர்ஜுனின் நடிப்புத் திறமைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது. அந்த நம்பிக்கையை வீணாக்காமல், தனது கதாபாத்திரத்தை உணர்ச்சியோடு வெளிப்படுத்தி பாராட்டுகளை குவித்துள்ளார் சாரா.
Add a Comment
