சல்மான்கானின் புதிய படத்தில் நடிக்க நயன்தாராவுக்கு எத்தனை கோடி சம்பளம் தெரியுமா?

தமிழில் சுந்தர்.சி இயக்கியுள்ள மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடித்துள்ளார் நயன்தாரா. இதுதவிர ஹாய், டாக்ஸிக் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். ஏற்கனவே ஹிந்தியில் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ஜவான் படத்தில் நடித்தவர், அடுத்து சல்மான் கானுக்கு ஜோடியாகவும் ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை விஜய் நடிப்பில் வாரிசு படத்தை இயக்கிய வம்சி இயக்குகிறார். தில் ராஜு தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்க உள்ளது. இந்த படத்தில் நடிப்பதற்கு நயன்தாரா 10 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading