தனுஷின் D56 படத்தில் நடிக்கும் ‘லப்பர் பந்து’ பட நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி?

‘கர’ திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்த நடிகர் தனுஷ், தற்போது இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 55வது படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தனுஷின் 56வது திரைப்படம் உருவாக உள்ளது.

இந்தப் படம் முழுவதும் மதுரை நகரத்தை மையமாகக் கொண்ட கதைக்களத்தில் உருவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை வரும் ஜூலை மாதத்தில் மதுரையில் தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க ருக்மணி வசந்த் உடன் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக முன்பே தகவல்கள் வெளியானது. தற்போது ‘லப்பர் பந்து’, ‘தக் லைப்’ போன்ற படங்களில் நடித்துள்ள சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி இப்படத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் அவருக்கான சோதனைப் படப்பிடிப்பும் நடைபெற்றுள்ளது. ‘லப்பர் பந்து’ படத்தை இயக்கிய தமிழரசன் பச்சமுத்துவே இந்தப் படத்தையும் இயக்குவதால், அந்தப் படத்தில் நடித்த அனுபவத்தின் அடிப்படையில் சஞ்சனாவுக்கு இந்தப் படத்திலும் முக்கியமான கதாபாத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading