தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில், ‘வாரிசு’, ‘மகரிஷி’ போன்ற படங்களை இயக்கிய வம்சி பைடிபள்ளி இயக்கத்தில், ஹிந்தி நடிகர் சல்மான் கான் புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.
இந்தப் படம் ஹிந்தி மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகும் என்று சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இதில் கதாநாயகியாக நயன்தாரா இணைந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதத்தில் தொடங்கும் என முன்பே கூறப்பட்டது. தற்போது இந்தப் படத்தில் மேலும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிகர் அரவிந்த்சாமி மற்றும் ஹிந்தி நடிகர் அனில் கபூர் ஆகியோர் இணைந்து நடிக்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
