டோலிவுட் இயக்குனருடன் கைகோர்க்கும் பிரதீப் ரங்கநாதன்?

‘லவ் டுடே’, ‘டிராகன்’, ‘டியூட்’ என தொடர்ச்சியாக வெற்றிப் படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் மற்றும் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன். இவரது நடிப்பில், விக்னேஷ் சிவன் இயக்கிய ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இதன்பின் பிரதீப்பின் அடுத்த படம் பற்றிய எந்த உறுதியான தகவலும் வெளியிடப்படவில்லை. வெறும் தகவல்களே பரவி வருகின்றன.

இதன்படி, தெலுங்கு ‘செக்’ மற்றும் ‘சாகசம்’ படங்களை இயக்கிய சந்திரசேகர் யெலட்டி இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 இதனை ‘டியூட்’ படத்தை தயாரித்த தெலுங்கு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க உள்ளது. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளிலும் வெளியாகும் திட்டம் உள்ளது.

நக்க

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading