இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வான உறியடி விஜயகுமாரின் ‘அறிவு’

உறியடி விஜயகுமார் கதாநாயகனாக நடித்துள்ள ‘அறிவு’ திரைப்படம், இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் இந்தியன் பனோரமா பிரிவில் இடம்பெறத் தேர்வாகியுள்ளது. ‘நியூ ஹாரிஜன்ஸ்’ என்ற பிரிவில் திரையிடப்பட உள்ள இப்படம், திரையரங்க வெளியீட்டுக்கு முன்பே இந்த அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. மூவிட்ரோன் புரொடக்‌ஷன் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது.

சாய்வினோத் ஜெயக்குமார் தயாரிப்பில் உருவான இப்படத்தை, இயக்குநர் சத்யசிவா இயக்கியுள்ளார். உறியடி விஜயகுமாருடன் கயல் ஆனந்தி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் முன்னாள் கால்பந்து வீரர் ஐ.எம். விஜயன், சிங்கம்புலி, தீபா சங்கர் உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் இடம்பெற்றுள்ளனர்.

பெண்களின் உரிமைகள் மற்றும் அவர்கள் அன்றாடம் சமூகத்தில் சந்திக்கும் சிக்கல்களைப் பேசும் கதையாக ‘அறிவு’ உருவாகியுள்ளது. பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு, சமூகத்துக்கான வலுவான கருத்தை முன்வைக்கும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. சமூகப் பார்வையுடன் கூடிய இந்தக் கதையை, சுவாரஸ்யமான சினிமா வடிவில் பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியாக இப்படம் உருவாகியிருக்கிறது. இப்படத்துக்கு. டி. இமான் இசையமைத்துள்ளார். கோவாவில் நடைபெறவுள்ள 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுவதற்குத் தேர்வாகியிருப்பது, ‘அறிவு’ படக்குழுவுக்குக் கிடைத்துள்ள முக்கிய அங்கீகாரமாக அமைந்துள்ளது.

Add a Comment

Leave a Reply