புதிய மைக்ரோ டிராமா தளத்தைத் தொடங்கும் அமீர்கான் புரொடக்ஷன்ஸ்!

பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களான அமீர்கான் புரொடக்ஷன்ஸ் மற்றும் எக்செல் என்டர்டெயின்மென்ட் இணைந்து புதிய மைக்ரோ டிராமா தளத்தைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளன. இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் குறுகிய வடிவ மொபைல் பொழுதுபோக்குச் சந்தையில் நுழையும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதற்காகப் புதிய ஒரிஜினல் படைப்புகள் மற்றும் டிஜிட்டல் படைப்பாளர்களுடனான பிரத்யேகக் கூட்டணிகள் மூலம் உள்ளடக்கங்கள் உருவாக்கப்பட உள்ளன. மொபைல் போன்களில் பார்ப்பதற்கு ஏற்ற வகையில், குறுகிய நேரத்தில் விறுவிறுப்பான கதைகளை வழங்கும் விதமாக இந்த மைக்ரோ டிராமாக்கள் வடிவமைக்கப்பட உள்ளன.

Add a Comment

Leave a Reply