நடிகர் லெஜண்ட் சரவணன் நடிக்கும் ‘லீடர்’ படம் ஏப்ரல் 10-ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் முக்கியமான ரோலில் நடிகை ஐஸ்வர்யா நடித்துள்ளார். இந்த படம் குறித்து ஐஸ்வர்யா கூறுகையில், “இந்த படத்தின் ஹீரோ சரவணன் மிகவும் நல்ல மனுஷன். அதை நேரில் பார்த்தேன். சிறந்த தயாரிப்பாளரும் அவர்.
இப்படத்துக்காக ஜெய்ப்பூர் சென்ற போது நல்ல சாப்பாடு, நல்ல சுற்றுலா அனுபவித்தேன். எனை ராணி மாதிரி பார்த்து கவனித்தார். இப்படிப்பட்ட ஹீரோ இருந்தால் வீடும், நாடும் நன்றாக இருக்கும். ஜிப்ரான் இசை அருமை. படங்கள் இல்லாத நிலையில் இந்த வாய்ப்பு கிடைத்தது. இயக்குனர் துரை செந்தில்குமார் ‘பட்டாஸ்’ படத்தில் காட்டிய அடிமுறை தற்காப்பு கலை எனும் காட்சியைப் போலவே, இப்படத்திலும் அதே மாதிரி கதை சொல்லப்பட்டு உள்ளது. ஹீரோயினாக பாயல் ராஜ்புத்து நடித்துள்ளதற்கும் நன்றி. நான் அவருக்கு அம்மாவாக நடித்துள்ளேன்” என தெரிவித்துள்ளார்.
அறந்தாங்கி நிஷா கூறுகையில், “இந்த படத்தில் நான் மட்டும் அல்ல, என் கணவரும் நடித்துள்ளார். வீட்டில் இருப்பது போல் படப்பிடிப்பில் அமைதியாக இருந்தார். கடந்த 15 ஆண்டுகளாக அவர் வீட்டிலும் இப்படித்தான் நடந்து வந்தார்” என தெரிவித்துள்ளார்.
