விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே. சூர்யா, கிர்த்தி ஷெட்டி ஆகியோர் நடித்துள்ள படம் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ ஏப்ரல் 10ம் தேதி திரைக்கு வர உள்ளது. தற்போது இப்படத்தின் கதைக்களம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
கதையின் பின்னணி, காதல் மற்றும் உறவுகளை முழுமையாக காப்பீடு செய்யக்கூடிய ஒரு உலகில் அமைந்துள்ளது. இதில், மனவேதனையை முன்கூட்டியே கணித்து, கணக்கிடப்பட்ட அபாயத்தின் அடிப்படையில் உறவுகளை கட்டுப்படுத்தும் ஒரு ஆப் (செயலி) உருவாகிறது. கதையின் நாயகன், காதல் என்பது வெறும் தரவு மட்டுமே என நம்புகிறார். ஆனால், அந்த ஆப் உண்மையில் அவருடைய காதலுக்கு எதிரியாக மாறும்போது, அவன் மற்றும் காதலி பிரியத் தொடங்குகிறார்கள்.
2040ம் ஆண்டை பின்னணியாகக் கொண்ட இந்தக் கதையில், நாயகன் உலகம் முழுவதும் நம்பும் அந்த ஆப்பை தேர்ந்தெடுப்பாரா அல்லது உணர்வுபூர்வமான காதலை தேர்ந்தெடுப்பாரா என கடினமான முடிவை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. சமூக வலைதளங்களில் இதுதான் படத்தின் கதை என்று வைரலாக பரவியுள்ளது.
