நடிகர் மம்முட்டி சமீபத்தில் ரசிகர்களுடன் சந்திப்பு நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் செலவிட்டு ஒவ்வொருவருடனும் புகைப்படம் எடுத்துக் கொண்டு மகிழ்ந்தார்.
நேற்று முன்தினம் கொச்சியில் உள்ள போல்ட் காட்டி பேலஸில் நடைபெற்ற இந்த ரசிகர் சந்திப்பில், இளைஞர்கள், வயதானவர்கள், சிறுவர்கள், பெண்கள் என அனைத்து தரப்பு ரசிகர்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். பத்தினம் திட்டா, எர்ணாகுளம், திருச்சூர், ஆலப்புழா, கோழிக்கோடு உள்ளிட்ட 8 மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்கள் மம்முட்டியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
மம்முட்டியும் எந்தவித சோர்வும் இல்லாமல், சிரமம் உணராமலேயே ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்து, அவர்களை சந்தோஷத்துடன் அனுப்பி வைத்தார். இதைச் சமீபத்தில் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
