சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடிக்கும் மாளவிகா மனோஜ்?

தாய் கிழவி’ திரைப்படத்தின் வெற்றியால் தயாரிப்பாளராக உற்சாகத்தில் இருக்கும் சிவகார்த்திகேயன், அந்தப் படத்தின் இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் தற்போது ‘சேயோன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் பணிகளை முடித்த பின்னர், ‘பார்க்கிங்’ திரைப்படத்தை இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்கத் திட்டமிட்டுள்ளார்.

இந்த புதிய படத்தில் கதாநாயகியாக யார் நடிக்கப் போகிறார் என்பது இன்னும் இறுதியாக முடிவு செய்யப்படாத நிலையில், சிவகார்த்திகேயனின் தங்கையாக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகை மாளவிகா மனோஜ் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மாளவிகா மனோஜ், சமீபத்தில் வெளியான ‘ஜோ’ மற்றும் ‘ஆண்பாவம் பொல்லாதது’ போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே கவனம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் கதையும், குறிப்பாக சிவகார்த்திகேயனின் தங்கை கதாபாத்திரத்தின் முக்கியத்துவமும் மாளவிகாவை மிகவும் கவர்ந்ததால், அவர் இந்த வாய்ப்பை உடனடியாக ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading