பிரதீப் ரங்கநாதன் – விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவான ‘LIK’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் பிரதீப் ரங்கநாதன் மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘எல்ஐகே’. இசையமைப்பாளர் அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்தப் படத்தில், எஸ்.ஜே. சூர்யா, யோகி பாபு, கிருத்தி ஷெட்டி, சீமான், ஷாரா, கௌரி கிஷன், மாளவிகா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கடந்த சில மாதங்களாகவே இந்த திரைப்படத்தின் வெளியீட்டு தேதியில் பல முறை மாற்றங்கள் ஏற்பட்டன.  விஎஃப்எக்ஸ் பணிகள் மற்றும் தயாரிப்பு தாமதம் காரணமாக இப்படத்தின் வெளியீடு தள்ளிப்போயிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், தற்போது இந்தப் படம் வருகிற ஏப்ரல் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என புதிய புரோமோ வீடியோவுடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த புரோமோவில் பிரதீப் ரங்கநாதன், விக்னேஷ் சிவன் மற்றும் அனிருத் ஆகியோர் இணைந்து வெளியீட்டை குறித்து பேசியிருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இதற்கு முன்னதாக ஏப்ரல் 3ம் தேதி இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading