‘ராபின்ஹூட்’ என்ற தெலுங்கு திரைப்படத்தில் இடம்பெற்ற ‘அதி தான் சர்ப்பிரைஸ்…’ என்ற பாடலில் மாராப்பில் மல்லிகைப் பூ அணிந்து கெட்டிகா சர்மா ஆடிய நடனம் ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது. அந்த ஒரு பாடலின் மூலம் பரவலாக பேசப்பட்ட கெட்டிகா சர்மா, தற்போது எங்கு சென்றாலும் தனது கவர்ச்சிகரமான உடைத் தேர்வுகளால் அனைவரையும் ஈர்த்து வருகிறார்.
இதற்கிடையில், ஹிப் ஹாப் ஆதி இயக்கி நடிக்கும் ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தில் நடித்திருப்பதன் மூலம், கெட்டிகா சர்மா தமிழ் சினிமாவிலும் அறிமுகமாக இருக்கிறார். சமீபத்தில் ‘ஆரா பத்துக்கு பத்து’ என்ற பாடலுக்காக அவர் ஆடிய நடன அசைவுகள் சமூக வலைதளங்களில் டிரெண்டாக பரவி வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய கெட்டிகா சர்மா, “தெலுங்கு திரையுலகைத் தாண்டி தமிழ் சினிமாவிற்கு வந்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. தமிழ் திரையுலகிலும் முன்னணி நடிகையாக திகழ வேண்டும் என்ற ஆசை உள்ளது. இங்கும் ரசிகர்களை கவர விரும்புகிறேன். இனி என்ன நடக்கிறது என்பதை காத்திருந்து பார்ப்போம், என்று தெரிவித்துள்ளார்.
