ஜனநாயகன் படத்தை தொடர்ந்து தனது அடுத்த படத்திற்கு தயாரான இயக்குனர் ஹெச்.வினோத்!

இயக்குநர் ஹெச். வினோத்தின் அடுத்த திரைப்படம் தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகி வருகின்றன. ‘வலிமை’, ‘துணிவு’ ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, அவர் நடிகர் விஜய்யை வைத்து ‘ஜன நாயகன்’ திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். ஆனால் தணிக்கை சான்றிதழ் பெற முடியாத காரணத்தால் இப்படம் பொங்கல் வெளியீட்டிலிருந்து விலகியது.

தற்போதைய தகவல்களின் படி, தேர்தல் முடிந்த பின்னர் ஏப்ரல் மாத இறுதியில் ‘ஜன நாயகன்’ திரைப்படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், இயக்குநர் ஹெச். வினோத், நடிகர் தனுஷை வைத்து புதிய படத்தை இயக்குவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும். ஆனால், தனுஷின் தேதிகள் இல்லாத காரணத்தால் அந்த திட்டம் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, அடுத்ததாக நடிகர் சூர்யாவை வைத்து ஹெச். வினோத் படம் இயக்கவுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது தனது புதிய படத்திற்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வரும் ஹெச். வினோத், அடுத்த சில மாதங்களில் கதையை முடித்து, ஜூலை மாதத்தில் படப்பிடிப்பை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading