ரியோ ராஜ் நடிக்கும் ‘ராம்‌ இன் லீலா’ படப்பிடிப்பு நிறைவு!

2019ஆம் ஆண்டு வெளியான ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரியோ ராஜ். அதனைத் தொடர்ந்து ‘பிளான் பண்ணி பண்ணனும்’, ‘ஜோ’, ‘ஸ்வீட் ஹார்ட்’, ‘ஆண்பாவம் பொல்லாதது’ போன்ற படங்களில் நடித்ததன் மூலம் அவர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றார்.

இதனைத் தொடர்ந்து தற்போது நடிகர் ரியோ ராஜ், “ராம் இன் லீலா” என்ற புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அறிமுக இயக்குநர் ராம்சந்திரன் கண்ணன் இயக்கி வருகிறார். இப்படத்திற்கு அங்கித் மேனன் இசையமைக்கிறார். கதாநாயகியாக வர்திகா நடித்துள்ளார். காதலை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த நிலையில், கடந்த நான்கு மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வந்த “ராம் இன் லீலா” திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading