தன்னை குறித்து பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை மலைக்கா அரோரா!

ஒருகாலத்தில் சிறப்பு பாடல்களில் கவர்ச்சியான நடனங்களால் பெரும் வரவேற்பைப் பெற்ற மலைக்கா அரோரா, தற்போது தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். சமீபத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்த “தம்மா” திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலில் நடனமாடி ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

52 வயதாக இருந்தாலும் தனது உடல் நலன், ஃபிட்னஸ் மற்றும் ஸ்டைலின் மூலம் தொடர்ந்து ரசிகர்களின் கவனத்தைப் பெற்று வருகிறார். அதே சமயம், அவரது தனிப்பட்ட வாழ்க்கையும் அடிக்கடி செய்திகளில் இடம்பெற்று வருகிறது. ஏற்கனவே தனது கணவருடன் விவாகரத்து பெற்ற மலைக்கா அரோரா, அர்ஜுன் கபூர் உடன் காதலில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இதற்கிடையில், ஒரு தொழிலதிபருடன் டேட்டிங் செய்து வருகிறார் என்ற வதந்திகளும் பரவின. இந்த வதந்திகள் குறித்து மலைக்கா அரோரா விளக்கம் அளித்துள்ளார். “இப்படிப்பட்ட செய்திகள் ஆரம்பத்தில் என்னை பாதித்தன. ஆனால் தற்போது நான் மற்றும் என் மகன் இதைப் பார்த்து சிரித்துக்கொண்டே இருக்கிறோம்,” என்று அவர் தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்துகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading