நடிகை சமந்தா, நாக சைதன்யா உடனான விவாகரத்திற்குப் பிறகு, பிரபல இயக்குநரான ராஜ் நிடிமோடு அவர்களை காதலித்து இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்டார். தனது திருமண வாழ்க்கை குறித்து அவர் அளித்த பேட்டியில், “முதல் திருமணம் தோல்வியடைந்தது என்பதால் வாழ்க்கை முடிந்து விட்டதாக அர்த்தமில்லை.
வாழ்க்கையில் இரண்டாவது வாய்ப்பு எப்போதும் இருக்கும். அந்த வாய்ப்பை ஒருவர் எப்படி பயன்படுத்துகிறார் என்பதையே வாழ்க்கையின் தரம் நிர்ணயிக்கும். தற்போது நான் முழுமையான திருப்தியுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்ந்து வருகிறேன். அதற்கு முக்கிய காரணம் என் கணவர் ராஜ் நிடிமோடு தான்.
நாங்கள் மிகவும் இணக்கமான தம்பதியர்கள். சினிமா பார்க்குதல், விளையாட்டுகளில் ஈடுபடுதல், உடற்பயிற்சி செய்வது போன்ற செயல்களை ஒன்றாகச் சேர்ந்து மகிழ்ச்சியுடன் அனுபவிக்கிறோம். ராஜ் எனக்கு மிகவும் அருகாமையில் இருப்பவர். அவர் இல்லாமல் நான் ஒரு நாள்கூட வாழ முடியாது,” என்று தெரிவித்துள்ளார்.
