இந்திய திரையுலகில் முதல் முறையாக 1000 கோடி ரூபாய் வசூலை கடந்த திரைப்படமாக பாகுபலி 2 2017ஆம் ஆண்டு வெளியாகி சாதனை படைத்தது. இருப்பினும், அந்த திரைப்படத்தின் மொத்த வசூல் 1800 கோடி ரூபாயில் நிறுத்தமடைந்தது. அதனைத் தொடர்ந்து, 2016ஆம் ஆண்டு வெளியான டங்கல் திரைப்படம் சீனாவில் வெளியான பிறகு 2000 கோடி ரூபாய் வசூலைக் கடந்து மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியது. அந்த சாதனையை இதுவரை எந்த இந்திய திரைப்படமும் முறியடிக்க முடியாமல் உள்ளது. இதற்குப் பின்னர் புஷ்பா 2, ஆர்ஆர்ஆர், கேஜிஎப் 2, ஜவான், பதான் ஆகிய திரைப்படங்கள் 1000 கோடி ரூபாய் வசூல் சாதனையை எட்டின.
இரண்டு பாகங்களாக வெளியான திரைப்படங்களில் பாகுபலி, கேஜிஎப், புஷ்பா ஆகியவற்றின் இரண்டாம் பாகங்களே 1000 கோடி வசூலைத் தாண்டியுள்ளன. அவற்றின் முதல் பாகங்கள் அந்த அளவிலான வசூலை எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், கடந்த 2025ஆம் ஆண்டு வெளியான துரந்தர் திரைப்படத்தின் முதல் பாகம் 1000 கோடி வசூலை கடந்ததுடன், கடந்த வாரம் வெளியான அதன் தொடர்ச்சியான துரந்தர் தி ரிவெஞ்ச் திரைப்படமும் 1000 கோடி ரூபாய் வசூலைத் தாண்டி புதிய சாதனையை உருவாக்கியுள்ளது. இதுவரை இரண்டு பாகங்களும் 1000 கோடி வசூலைக் கடந்த எந்த திரைப்படமும் இல்லை என்பது இதன் சிறப்பாகும்.
‘துரந்தர் 2’ திரைப்படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, இரண்டாம் பாகங்களில் அதிக வசூலைப் பெற்ற பாகுபலி 2 திரைப்படத்தின் 1800 கோடி ரூபாய் வசூலை இது முறியடிக்குமா என்பது குறித்து எதிர்பார்ப்பு நிலவுகிறது.
1000 கோடி ரூபாய் வசூலை கடந்த இந்திய திரைப்படங்களின் பட்டியல்:
2000 கோடி – டங்கல்
1800 கோடி – பாகுபலி 2
1700 கோடி – புஷ்பா 2
1400 கோடி – துரந்தர்
1300 கோடி – ஆர்ஆர்ஆர்
1200 கோடி – கேஜிஎப் 2
1100 கோடி – ஜவான்
1100 கோடி – கல்கி 2898 எடி
1050 கோடி – பதான்
1042 கோடி – துரந்தர் தி ரிவெஞ்ச்
