பூஜையுடன் தொடங்கிய ரியோ ராஜ்-ன் #Maddy படப்பிடிப்பு!

ரியோ ராஜ், கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். அதன் பின்னர் பிளான் பண்ணி பண்ணனும், ஜோ, ஸ்வீட் ஹார்ட் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த அவர், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றார்.

இவரது நடிப்பில் சமீபத்தில் ஆண்பாவம் பொல்லாதது திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. கணவன்-மனைவி உறவை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈரத்து வெற்றிப்படமாக மாறியது. இதனைத் தொடர்ந்து, ராம் இன் லீலா என்ற திரைப்படத்தில் ரியோ ராஜ் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், ரியோ ராஜ் நடிக்கவுள்ள புதிய திரைப்படத்தின் தலைப்பு சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், இந்தப் படத்திற்கு மேடி எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பை லோகேஷ் கனகராஜ், சூரி மற்றும் சிவகார்த்திகேயன், சிபி சக்கரவர்த்தி, ரவிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர். மேலும், இயக்குநர் கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் ரியோ ராஜ் மற்றும் சானியா ஐயப்பன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். தற்போது, ‘மேடி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜை வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading