திருமணம் இப்போதைக்கு நிச்சயமாக இல்லை… -நடிகை சாய் பல்லவி OPEN TALK!

மலையாளத் திரைப்படமான ‘பிரேமம்’ படத்தில் மலர் ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை சாய் பல்லவி. தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழித் திரைப்படங்களில் முன்னணி நடிகையாக விளங்கிவரும் இவர், தற்போது இந்தி திரைப்படங்களிலும் தனது பயணத்தை விரிவுபடுத்தி வருகிறார்.

மிகப்பெரிய பொருட்செலவில் தயாராகி வரும் ‘சீதாராம்’ திரைப்படத்தில் சாய் பல்லவி தற்போது நடித்து வருகிறார். படப்பிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், அண்மையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அவர் பேசிய காணொளி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

அந்த நிகழ்ச்சியில், திருமணம் எப்போது? என்ற கேள்வி எழுப்பப்பட்டபோது, “தற்போது அதற்கு எந்தத் திட்டமும் இல்லை… நிச்சயமாக இப்போதைக்கு இல்லை” என்று தெளிவாக பதிலளித்தார். மேலும், தாம் தற்போது தனிப்பட்ட வாழ்க்கையில் ஒருவராகவே இருப்பதாகவும் சாய் பல்லவி குறிப்பிட்டார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading