நடிகைகளை ரசித்து கொண்டாடுங்கள்…ஆனால் தவறாக விமர்சனம் செய்யாதீர்கள் – நடிகை திஷா பதானி!

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வரும் திஷா பதானி, சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். தற்போது அவர் அவராபன்-2 மற்றும் வெல்கம் டூ ஜங்கிள் ஆகிய திரைப்படங்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார்.

எந்தவொரு விழாவிற்குச் சென்றாலும் கவர்ச்சியை மையமாகக் கொண்டு தனித்துவமான உடைகளை அணிந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பது திஷா பதானியின் வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வரிசையில், சமீபத்தில் அவர் அணிந்திருந்த ஒரு உடை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக, மிகுந்த திறந்த தன்மையைக் காட்டிய அந்த உடையை சரியாக அணிந்து பராமரிப்பதற்கே அவர் சிரமப்பட்டதாக கூறப்படுகிறது.

இதன் பின்னணியில், இப்படிப்பட்ட உடைகளை அணிவதன் அவசியம் என்ன, பின்னர் ஏன் அதனால் சிரமப்பட வேண்டும் என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டனர். பலரும் அவரது உடைத் தேர்வை கடுமையாக விமர்சித்தனர். இந்த விமர்சனங்களுக்கு பதிலளித்த திஷா பதானி, “நடிகைகளை ரசித்து கொண்டாடுங்கள். ஆனால் அவர்கள் அணியும் உடைகள் குறித்து தேவையற்ற விமர்சனங்களை முன்வைக்க வேண்டாம். இங்கு கவர்ச்சி மற்றும் ஆபாசம் என்ற இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் தெரியாதவர்கள் யாரும் இல்லை,” எனத் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading