எனக்கும் அனிருத்துக்கும் சண்டையோ பிரச்சினையோ எதுவும் இல்லை… இசையமைப்பாளர் தமன் டாக்!

தெலுங்கு திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான தமன் பல முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அதேசமயம், அதர்வா நடித்த ‘இதயம் முரளி’ திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் மீண்டும் அறிமுகமாகிறார். 

சமீபத்தில் இசையமைப்பாளர் தமன் அளித்த பேட்டியில் தனது சினிமா பயணம் குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்தார். குறிப்பாக, மற்ற இசையமைப்பாளர்களுடன் உள்ள உறவு குறித்து பேசும்போது, அனைவரும் ஒன்றாக ஒரு வாட்ஸ் ஆப் குழுவில் இருந்து ஜாலியாக உரையாடுவதாக கூறினார். எனக்கும் அனிருத்துக்கும் வெளியில் போட்டி இருப்பது போல் தோன்றினாலும், உள்ளுக்குள் எந்த போட்டியோ பொறாமையோ அதேபோல் எந்த சண்டையும் இல்லை என்றார்.

மேலும், தற்போது தாம் இசையமைக்கும் ‘Itllu Arjuna’ படத்தில் அனிருத் ஒரு பாடலை பாடியுள்ளதாகவும் தெரிவித்தார். அதேபோல் தேவி ஸ்ரீ பிரசாத் உடன் தினமும் பேசும் அளவிற்கு நெருக்கம் உள்ளதாகவும் கூறினார். ஒரே நாளில் பாடல்கள் வெளியானாலும், யார் சிறப்பாக வழங்குகிறோம் என்பதில் போட்டி இருக்கும், ஆனால் நல்ல படைப்புகள் வந்தால் ஒருவருக்கொருவர் பாராட்டுவது வழக்கம் என்றும் தெரிவித்தார். தன்னுடைய OG பாடல்கள் வெளியாகியபோது அனிருத் உள்ளிட்டோர் பாராட்டியதாகவும், அவருடன் கிரிக்கெட் விளையாடும் அளவிற்கு நெருக்கம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading