கோலாகலமாக தொடங்கிய டெல்லி சர்வதேச திரைப்பட விழா!

டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் 2026-ம் ஆண்டுக்கான சர்வதேச திரைப்பட விழா துவக்க நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில் முதல்-மந்திரி ரேகா குப்தா, நடிகைகள் ஹேமா மாலினி, ஷர்மிளா தாகூர், கங்கனா ரணாவத் மற்றும் டெல்லி மந்திரிகள், உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை குத்து விளக்கேற்றி அவர்கள் துவக்கி வைத்தனர். பிரமாண்ட நிகழ்ச்சியாக நடத்தப்படும் இந்த விழாவில், இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளை சேர்ந்த திரைப்படங்களும் திரையிடப்படும். இந்த சர்வதேச திரைப்பட விழா இன்று முதல் தொடங்கி வருகிற 31-ந்தேதி வரை 7 நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறும். இதில் பல்வேறு வகையான மற்றும் பல்வேறு மொழிகளின் படங்களும் திரையிடப்பட உள்ளன.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading