யூத் திரைப்படம் மக்களின் பேராதரவோடு திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது. கென் கருணாஸ் இயக்கி ஹீரோவாக நடித்திருந்த இப்படம் முதல் நாளில் இருந்தே பாக்ஸ் ஆபிஸில் வசூலை வாரிக்குவித்து வருகிறது. அதுமட்டுமின்றி சூர்யா, சிம்பு, கார்த்தி போன்ற முன்னணி ஹீரோக்களும் யூத் படத்தின் குழுவினரை நேரில் அழைத்து தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.6 நாட்களை கடந்திருக்கும் யூத் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் பற்றிய விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, 6 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 33 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யப்போகிறது என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.
Add a Comment
