‘ உஸ்தாத் பகத்சிங்’ படத்தின் BTS வீடியோ வெளியீடு!

மைத்ரி மூவி மேக்கரஸ் நிறுவனம் தயாரிப்பில் ‘உஸ்தாத் பகத்சிங்’ படத்தை ஹரிஷ் சங்கர் இயக்கியுள்ளார். 2012 ஆம் ஆண்டு வெளியான ‘கப்பர் சிங்’ படத்திற்குப் பிறகு பவன் கல்யாண் மற்றும் ஹரிஷ் சங்கர் கூட்டணியில் உருவாகி வரும் இரண்டாவது படம் இது. தேவிஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கதாநாயகிகளாக ஸ்ரீலீலா, ராஷி கண்ணா இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தில் பவன் கல்யாண் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். தணிக்கை வாரியம் ‘உஸ்தாத் பகத் சிங்’ படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியது. இப்படத்தின் டிரெய்லரை சிரஞ்சீவி பாராட்டியிருந்தார். இந்நிலையில், பவன் கல்யாணின் ‘உஸ்தாத் பகத் சிங்’ படத்தின் படப்பிடிப்பு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் 7 நாட்களில் ரூ.87 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading