ரன்வீர் சிங் நடிப்பில் வெளியாகி பாக்ஸ் ஆஃபிஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ள துரந்தர் 2 திரைப்படம் ரூ. 1,000 கோடி வசூலீட்டி சாதனை படைத்துள்ளது. ரன்வீர் சிங் நடிப்பில் வெளியாகி சக்கைப்போடு போட்டு ஆயிரம் கோடிக்கும் அதிகமாக வசூலித்த துரந்தர் திரைப்படத்தின் இரண்டாம் பாகமான துரந்தர்: தி ரிவென்ஞ்ச் மார்ச் 19 ஆம் தேதி வெளியானது. ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங், சாரா அர்ஜூன், அக்ஷய் கன்னா, சஞ்சய் தத், மாதவன் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளங்களின் நடிப்பில் படம் உருவாகியுள்ளது.
Add a Comment
