‘குட் பேட் அக்லி’ படத்தை தொடர்ந்து அஜித் குமார் மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் மீண்டும் புதிய படத்திற்காக இணைந்துள்ளனர். ‘டேர் டெவில்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை அஜித்தின் மனைவி ஷாலினி, தனது புதிய தயாரிப்பு நிறுவனமான பிரேவ் ஹார்ட்ஸ் மூலம் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.
இந்நிலையில், நவம்பர் 2-ம் தேதியான இன்று சென்னையில் ‘டேர் டெவில்’ படத்தின் பூஜை நடைபெற்றது. இதில் அஜித் கலந்துகொள்ளவில்லை. ஷாலினி, ஆதிக் ரவிச்சந்திரன், ஸ்ரீலீலா, அனிருத், பார்த்திபன், பிரபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வில் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் மற்றும் நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லி ஆகியோரும் கலந்துகொண்டனர். இதன் மூலம் இவர்களும் படத்தில் இடம்பெறுவது உறுதியாகியுள்ளது. உன்னி முகுந்தன் வில்லனாக நடிக்கிறாரா அல்லது இரண்டாவது கதாநாயகனாக வருகிறாரா என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை. படப்பிடிப்பு தீபாவளிக்குப் பிறகு நவம்பர் 12-ம் தேதி தொடங்கும் எனக் கூறப்படுகிறது.
