தெலுங்கில் ரீ ரிலீஸாகும் சிம்புவின் ‘வல்லவன்’

சமீபகாலமாக பழைய படங்கள் மீண்டும் வெளியாகி வரவேற்பையும், வசூலையும் பெற்று வருகின்றன. அந்தவகையில் கடந்த 2006ம் ஆண்டில் சிலம்பரசன் இயக்கி, நடித்து திரைக்கு வந்த படம் ‘வல்லவன்’. நயன்தாரா, ரீமாசென் , சந்தியா, சந்தானம் ஆகியோர் இணைந்து நடித்திருந்தனர். யுவன் இசையமைத்தார். பாடல்களும் ஹிட் அடித்தன. இந்த படத்தை அந்த சமயத்தில் தெலுங்கு பதிப்பில் ‘வல்லபா’ என்கிற பெயரில் டப்பிங் செய்து வெளியிட்டனர். தமிழில் வெற்றி பெற்றது போல் தெலுங்கிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.இந்நிலையில் 20 ஆண்டுகளுக்கு பின்னர் வல்லபா படத்தை தெலுங்கில் 4கே தரத்தில் விரைவில் ரீ ரிலீஸ் செய்வதாக அறிவித்துள்ளனர். வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. சமீபத்தில் ராகவா லாரன்ஸின் காஞ்சனா படத்தின் தெலுங்கு பதிப்பு ரீ-ரிலீஸாகி வசூலை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading