பாக்ஸ் ஆபிஸ் வசூலில் அடித்து நொறுக்கும் துரந்தர் 2!

ஆதித்யா தர் இயக்கத்தில், ரன்வீர்சிங் நடிப்பில் கடந்த வாரம் மார்ச் 19ம் தேதி வெளியான படம் ‘துரந்தர் தி ரிவெஞ்ச்’. இப்படம் முதல் வார இறுதியில் 761 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்தியாவில் மட்டும் 550 கோடியும், வெளிநாடுகளில் 211 கோடியும் வசூலித்துள்ளது என தெரிவித்துள்ளனர். மிக விரைவில் இந்தப் படம் 1000 கோடி வசூலைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென்னிந்திய மொழிகளில் திட்டமிட்டபடி அதேநாளில் வெளியாகி இருந்தால் வசூல் இன்னும் கூடுதலாக அமைந்திருக்கும். நேரடி ஹிந்திப் படங்களில் முதல் வார இறுதியில் அதிக வசூலைக் குவித்துள்ள படம் என்ற சாதனையை இந்தப் படம் பிடித்துள்ளது. இந்திய அளவில் ‘புஷ்பா 2’ படம் சுமார் 790 கோடி வசூலில் முதலிடத்தில் உள்ளது. 2025ல் வெளிவந்த ‘துரந்தர்’ முதல் பாகம் 1400 கோடி வசூலைக் கடந்தது. அந்த சாதனையை இரண்டாம் பாகம் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading