நிஜ வாழ்க்கையிலும் நன்றாக நடிப்பார்…கங்கை அமரனை நகைச்சுவையாக கலாய்த்த இசைஞானி இளையராஜா…!

இளையராஜா இசையமைப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘லெனின் பாண்டியன்’. இப்படத்தில் இளையராஜாவின் தம்பியான கங்கை அமரன் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ரோஜா நடித்துள்ளார். நடிகர் சிவாஜி கணேசனின் பேரனும், ராம்குமாரின் மகனுமான தர்ஷன் இப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற படவிழாவில் கலந்துகொண்ட இளையராஜா, சிவாஜி கணேசனின் நேரம் தவறாத பண்பை குறிப்பிட்டு அவரைப் புகழ்ந்து பேசினார்.

தொடர்ந்து தனது தம்பி கங்கை அமரன் குறித்து பேசிய இளையராஜா, அவர் திரைப்படங்களில் மட்டுமின்றி நிஜ வாழ்க்கையிலும் நன்றாக நடிப்பார் என்றும், தன்னிடமே கூட நடிப்பைக் காட்டுவார் என்றும் நகைச்சுவையாகக் கூறி கலாய்த்தார். இதையடுத்து பேசிய கங்கை அமரனின் மகனும் இயக்குநருமான வெங்கட் பிரபு, தனது தந்தை பொதுவாக நடிக்கும்போது சற்று ஓவர் ஆக்ட் செய்வார், ஆனால் ‘லெனின் பாண்டியன்’ படத்தில் மிகவும் சிறப்பாக நடித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், “அப்பாவிடம் வேலை வாங்குவது மிகவும் கஷ்டம். ஆனால் இந்தப் படத்தின் இயக்குநர் பாலா அதை சிறப்பாக செய்திருக்கிறார். எங்கள் அப்பாவை இந்த மாதிரி ஒரு கதாபாத்திரத்தில் நான் இதுவரை பார்த்ததே இல்லை. படம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே அவர் கங்கை அமரனாக தெரியாமல், ‘துரைராசு’ கதாபாத்திரமாக மட்டுமே தெரிகிறார்” என்று வெங்கட் பிரபு கூறினார்.

—

Add a Comment

Leave a Reply