‘காளிதாஸ் 2’ திரைப்படத்தின் மூலம் 25 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் மீண்டும் நடிக்கிறார் சங்கீதா. சென்னையில் நடைபெற்ற விழாவில் அவர் பேசியபோது, “எனக்கு மிகவும் பிடித்த வகையில் இந்தக் கதை அமைந்துள்ளது. என்னை நம்பி இந்த கதாபாத்திரத்தை வழங்கிய இயக்குநருக்கு என் நன்றி. 25 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் மீண்டும் நடிப்பது எனக்கே புதுமையாக உள்ளது.
கடந்த பல ஆண்டுகளாக வீட்டிலேயே இருந்து குழந்தைகளை கவனித்து வந்தேன். இரவு நேரங்களில் சீக்கிரமே தூங்கிவிடுவேன். ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் இரவுகளில் நடைபெற்றது. இருந்தாலும், படக்குழுவின் உற்சாகத்தை பார்த்தவுடன் எனக்கும் உற்சாகம் அதிகரித்தது.
இந்த படத்தில் பரத் ஹீரோவாக நடித்துள்ளார். படப்பிடிப்பு எப்படி இருக்கும் என ஆரம்பத்தில் பயந்தேன். ஆனால் முதல் நாளிலேயே பரத் எனக்கு பிடித்த நடிகராக மாறிவிட்டார். எனக்கு விருப்பமான பாடல்களை படப்பிடிப்பு தளத்தில் ஒலிபரப்பினார். கடைசி நாள் படப்பிடிப்பின் போது, வெளிநகரத்திலிருந்து சென்னைக்கு பேருந்தில் வந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நான் சினிமாவை விட்டு விலகவில்லை. என் கணவரும் சினிமாவிலேயே உள்ளார்” என்று கூறினார்.
