‘Central Board of Film Certification’ என்றே அழைக்க வேண்டும்… வேண்டுகோள் வைத்த கமல்ஹாசன்!

இந்திய சினிமாவில் முக்கியமான இடத்தைப் பெற்றவர் கமல்ஹாசன். சினிமா குறித்து தீவிரமான பார்வையும் முன்னெடுப்புகளும் கொண்டவர் என்பதால், அதனைச் சார்ந்த பல கருத்துக்களை அவர் அடிக்கடி வெளிப்படுத்தி வருகிறார். திரைப்படங்களுக்கு சான்றிதழ் வழங்கும் அமைப்பான CBFC குறித்து பொதுவாக ‘சென்சார்’ அல்லது ‘தணிக்கை வாரியம்’ என அழைக்கும் நடைமுறை நீண்டகாலமாக இருந்து வருகிறது.

ஆனால், ‘The Central Board of Film Censors’ என்ற பெயர் 1983ஆம் ஆண்டிலேயே ‘Central Board of Film Certification’ என மாற்றப்பட்டிருப்பதை நினைவூட்டிய கமல்ஹாசன், ‘தணிக்கை’ என்ற சொல்லைப் பயன்படுத்தாமல் தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஊடக நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். பல வருடங்களாக நடந்த விவாதங்களின் பின்னர் ‘censor’ என்ற சொல்லை நீக்கி, இந்தியாவின் மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் என்ற பெயர் கொண்டு வந்தோம். ‘Central Board of Film Certification’ என்றே அழைக்க வேண்டும்.

சினிமாவில் தணிக்கை என்பது தவறான கருத்து என்று வாதாடி, அந்த சொல்லை பயன்படுத்தாமல் மாற்றம் கொண்டு வந்தோம். தமிழ் ஊடகங்களும் ‘தணிக்கை’ என்ற சொல்லை தவிர்க்க வேண்டும். கலைக்கு தணிக்கை விதிப்பது ஒரு ஜனநாயக அரசின் நோக்கம் ஆகக்கூடாது என்பதே உலக சினிமா ஏற்றுக் கொண்ட நிலைப்பாடு. தமிழ் சினிமாவும் அதையே பின்பற்ற வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading