‘மிருகம்’ படத்தின் படப்பிடிப்பு அனுபவங்கள் குறித்து மனம் திறந்த நடிகர் ஆதி!

பிரபல தென்னிந்திய நடிகரான ஆதி, தமிழில் ‘மிருகம்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து ‘அரவான்’, ‘ஈரம்’ போன்ற படங்களில் நடித்திருந்தாலும், 2007ஆம் ஆண்டு இயக்குநர் சாமி இயக்கத்தில் வெளியான ‘மிருகம்’ திரைப்படம் அவரது வித்தியாசமான மற்றும் தீவிரமான நடிப்பின் மூலம் பெரும் கவனத்தை பெற்றது. அந்த படத்தில் அவர் காட்டிய அர்ப்பணிப்பு பெரிதும் பேசப்பட்டது.

சமீபத்தில் அளித்த பேட்டியில் ‘மிருகம்’ பட அனுபவங்களை பகிர்ந்த அவர், “இந்த படத்தின் முதல் பாதி படப்பிடிப்பின் போது கதாபாத்திரத்திற்காக உடல் எடையை அதிகரித்தேன். எதுவாக கிடைத்தாலும் சாப்பிட்டு உடல் எடையை கூட்டினேன்.

ஆனால் இரண்டாம் பாதிக்காக மூன்று மாதங்களில் உடல் எடையை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மிகுந்த முயற்சியுடன் எடையை குறைத்தேன். அதன் பின்னர் சாப்பிட முடியாமல், உடல் மிகவும் பலவீனமாகி கைகள் நடுங்கும் நிலைக்கும் சென்றது. அந்த கதாபாத்திரத்திற்காக அவ்வளவு உழைப்பு தேவைப்பட்டது; அதனால் அதை செய்தேன்” என்று தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading