சூர்யா47 படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் அதிரடி காட்டும் நஸ்ரியா… வெளியான அப்டேட்!

‘ஆவேசம்’ திரைப்படத்தின் இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா தனது 47வது படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தை சூர்யா துவங்கியுள்ள தனது ‘ழகரம் ஸ்டுடியோஸ்’ நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார். இதில் நஸ்ரியா கதாநாயகியாகவும், முக்கிய கதாபாத்திரத்தில் நஸ்லின் நடித்தும் வருகின்றனர்.

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை நகரில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளில் நடைபெற்று வருகிறது. இந்த கட்டப்படப்பிடிப்பில் நஸ்ரியா இடம்பெறும் முக்கியமான சண்டைக் காட்சிகளை தீவிரமாக படமாக்கி வருகின்றனர்.

இந்த படத்திற்கு சண்டை இயக்குனராக சேட்டன் டிசொசா பணியாற்றுகிறார் என்று கூறப்படுகிறது. இவர் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்திற்கும் சண்டை இயக்குனராக பணியாற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading