சிறிய இடைவெளிக்கு பின்னர் ‘மைஸா’ படப்பிடிப்பில் கலந்து கொண்ட ராஷ்மிகா!

தெலுங்கு, ஹிந்தி என பிஸியாக நடித்துக் கொண்டிருப்பவர் ராஷ்மிகா மந்தனா. அவருக்கும் நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணத்தை முன்னிட்டு சுமார் ஒரு மாத காலம் இருவரும் தங்களது படப்பிடிப்புக்கு விடுமுறை விட்டனர். தற்போது ராஷ்மிகா மந்தனா மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஆரம்பித்துள்ளார். அவர் முதன்மைக் கதாநாயகியாக நடிக்கும் ‘மைஸா’ படப்பிடிப்பில் கலந்து கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்து, “மைஸா…..வேட்டை ஆரம்பம்” எனப் பதிவிட்டுள்ளார். தற்போது ‘காக்டெயில் 2’ ஹிந்திப் படத்திலும், ‘மைஸா, ரணபலி’ ஆகிய தெலுங்குப் படங்களிலும் நடித்து வருகிறார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading