‘யூத்’ படத்தின் முதல்நாள் வசூல் என்ன?

‘அம்பாசமுத்திரம் அம்பானி’, ‘நெடுஞ்சாலை’ படங்களின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் கென் கருணாஸ். அதனை தொடர்ந்து ‘அசுரன்’, ‘விடுதலை 2’, ‘வாத்தி’ உள்ளிட்ட படங்களில் நடித்து மக்களின் கவனத்தை பெற்றுள்ளார். இவர் தற்போது ‘யூத்’ என்ற படத்தை இயக்கியும் நடித்தும் உள்ளார். பார்வதா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் ஸ்ட்ரீட் பாய்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். ‘சிறை’ படம் மூலம் பாராட்டுகளை பெற்ற அனிஷ்மா, மீனாட்சி தினேஷ், பிரியன்ஷி யாதவ், சுராஜ் வெஞ்சரமூ ஆகியோர் இப்படத்தில் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.இந்நிலையில், இப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘யூத்’ திரைப்படம் முதல் நாளில் ரூ.3.2 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து வரும் விடுமுறை நாட்களை முன்னிட்டு இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading