ஜூனியர் என்டிஆரின் டிராகன் படப்பிடிப்பு செலவு ஒருநாளைக்கு இத்தனை கோடியா?

தேவரா, வார் 2 படங்களை அடுத்து பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடித்து வரும் படம் டிராகன். அவருக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் நடிக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகர் அனில் கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. டிராகன் படம் பிரமாண்டமான பட்ஜெட்டில் உருவாகிறது. குறிப்பாக இந்த படத்தின் பிரமாண்டமான காட்சிகளை ஜோர்டானில் படமாக்கி உள்ளனர். அப்போது ஒரு நாளைக்கு 1.5 கோடி வரை படப்பிடிப்புக்கு செலவிட்டார்களாம். அந்த அளவுக்கு அசாதாரணமான காட்சிகளை எல்லாம் அங்கு படமாக்கி உள்ளனர். டிராகன் படத்தின் பிரம்மாண்டம் இந்திய சினிமா ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும் என்கிறார்கள்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading