யு/ஏ சான்றிதழ் பெற்ற ‘லீடர்’

லெஜண்ட் சரவணன் மற்றும் இயக்குநர் துரை செந்தில்குமார் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘லீடர்.’ தி லெஜெண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்தப் படத்திற்கு எஸ். வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்ய பிரதீப் படத்தொகுப்பை கவனிக்கிறார்.கலை இயக்க பணிகளை துரைராஜ் மேற்கொண்டுள்ளார். இந்தப் படத்தின் சண்டை காட்சிகளை மேத்யூ மகேஷ் அமைத்துள்ளார். ஆக்ஷன் கதையம்சம் கொண்ட இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. லீடர் திரைப்படம் உலகளவில் ஏப்ரல் 09-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த நிலையில், லீடர் திரைப்படத்தின் சென்சார் அப்டேட் வெளியாகி உள்ளது. தணிக்கை குழு இந்தப் படத்திற்கு யு/ஏ சான்றளித்துள்ளது. லீடர் திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். தற்போது சென்சார் அப்டேட் வெளியாகி இருப்பதைத் தொடர்ந்து படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என்று தெரிகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading