ஏப்ரல் 10ம் தேதி வெளியாகும் ‘காளிதாஸ்-2’

கடந்த 2019ஆம் ஆண்டு நடிகர் பரத் நடித்த ‘காளிதாஸ்’ திரைப்படம் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்த திரைப்படத்தில் அவர் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இயக்குநர் ஸ்ரீ செந்தில் இயக்கிய இந்தப் படத்தில் ஆன் ஷீத்தல், சுரேஷ் மேனன் மற்றும் ஆதவ் கண்ணதாசன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். அந்தப்படம் விமர்சகர்களிடமும் நேர்மறையான கருத்துகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தற்போது, அந்த வெற்றியைத் தொடர்ந்து ‘காளிதாஸ் 2’ திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தத் திரைப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். ஸ்கை பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் அஜய் கார்த்தி, பிரகாஷ் ராஜ், பவானி ஸ்ரீ, அபர்ணதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும், ‘பூவே உனக்காக’ திரைப்படத்தின் மூலம் பிரபலமான சங்கீதா, 25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் படத்தின் மூலம் மீண்டும் திரைக்கு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் முன்னோட்டக் காணொளி கடந்த ஆண்டே வெளியிடப்பட்டது.

இந்நிலையில், ‘காளிதாஸ் 2’ திரைப்படம் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முன்னதாக இந்தப் படம் ஏப்ரல் 3ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading