‘மனிதன் தெய்வமாகலாம்’ படத்தின் ‘தங்கரத்தினமே’ பாடல் வெளியீடு!

விஒய்ஓஎம் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் ‘மனிதன் தெய்வமாகலாம்’ திரைப்படத்தை இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கி வருகிறார். இவர் முன்பு ‘டிரிப்’, ‘தூக்குத்துரை’ போன்ற திரைப்படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் செல்வராகவன் தற்போது முழுநேர நடிகராக மாறியுள்ள நிலையில், இந்தப் படத்தில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் குஷி ரவி, ஒய்ஜி மகேந்திரன், கௌசல்யா, கௌசி ரவி, மைம் கோபி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இயற்கைச் சூழலும் அமைதியும் நிரம்பிய ஒரு கிராமத்தில் நிகழும் துயரமான சம்பவம், அங்கு நிலவிய ஒற்றுமையை சிதைக்கிறது. அந்தச் சூழ்நிலையை மாற்றி அமைக்க மக்கள் மனவலிமையுடன் போராடும் கதாநாயகன், தனது கிராமத்தை காப்பாற்ற எடுக்கும் தீர்மானம் அவனை அங்கு தெய்வத்துக்கு இணையான உயரத்திற்கு கொண்டு செல்கிறது. இந்தக் கதையின் சாரமே ‘மனிதன் தெய்வமாகலாம்’ என்ற தலைப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ஏ.கே. பிரியன் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்தப் படத்தின் டீஸர் காணொளியை நடிகர் தனுஷ் வெளியிட்டார்.

இந்நிலையில், ‘மனிதன் தெய்வமாகலாம்’ திரைப்படத்தின் ‘தங்கரத்தினமே’ எனும் காணொளி பாடல் வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை மு.வி. எழுதிய வரிகளில் ஷிபி சீனிவாசன், பத்மஜா ஸ்ரீனிவாசன் மற்றும் ஜோதி ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். மேலும், இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி திரைக்கு வர உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading