சல்மான் கானின் ‘பேட்டில் ஆப் கல்வான்’ பட தலைப்பு மாத்ருபூமி என மாற்றம் !

இயக்குநர் அபூர்வ லக்கியா இயக்கத்தில் நடிகர் சல்மான் கான் தயாரித்து நடித்துவரும் திரைப்படம் ‘பேட்டில் ஆப் கல்வான்’. தற்போது இந்த திரைப்படத்தின் பெயரை ‘மாத்ருபூமி’ என மாற்றியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனுடன் புதிய போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.இந்த திரைப்படத்தின் டீசரும் இரண்டு பாடல்களும் சமீபத்தில் வெளியிடப்பட்டன. அந்த வெளியீட்டிற்கு பிறகு படத்தின் பெயரை மாற்றியிருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

2020ஆம் ஆண்டு இந்தியா – சீனா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய மற்றும் சீன வீரர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலை மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை வெளியீட்டிற்கு முன்பாக தங்களுக்குக் காட்சிப்படுத்த வேண்டும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சகம் முன்பு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் படத்தின் தலைப்பு மாற்றப்பட்டதன் காரணமாக தணிக்கை முன்பாக இருந்த சில சிக்கல்கள் தீர்ந்துள்ளதாக பாலிவுட் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த திரைப்படம் ஏப்ரல் 17ஆம் தேதி வெளியாகும் என்று முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அந்த வெளியீட்டு தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. புதிய வெளியீட்டு தேதி குறித்து படக்குழு இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடவில்லை.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading