ஜெயிலர் 2 படத்தில் ரஜினி சாருடன் நடிக்கும்போது எனக்கு மிகப்பெரிய சவால் இருந்தது – நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு!

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் பெரிய வெற்றியை பெற்றதைத் தொடர்ந்து தற்போது அதன் இரண்டாம் பாகமான ‘ஜெயிலர் 2’ தயாராகி வருகிறது. முதல் பாகத்தில் நடித்த முக்கிய நடிகர்களில் பலரும் இந்த தொடர்ச்சிப் படத்திலும் இணைந்துள்ளனர். அதே நேரத்தில் மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதற்கு முன்பு தமிழில் வெளியான ‘வீரதீர சூரன்’ திரைப்படத்தில் அவர் வெளிப்படுத்திய நடிப்பு மிகவும் பாராட்டைப் பெற்றது.

‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த அனுபவம் குறித்து சுராஜ் வெஞ்சாரமூடு பகிர்ந்தபோது, “படப்பிடிப்பு தளத்தில் ரஜினிகாந்த் என்னிடம் ‘உங்களுடைய வீரதீர சூரன் திரைப்படத்தை பார்த்தேன். அதில் நீங்கள் மிகச் சிறப்பாக நடித்திருந்தீர்கள்’ என்று பாராட்டினார்.

அவருடன் இணைந்து நடிக்கும் காட்சிகளில் எனக்கு ஏற்பட்ட சவால் என்னவென்றால், அவர் முன்னதாக நடித்திருந்த பல திரைப்படங்களின் புகழ்பெற்ற காட்சிகள் என் நினைவில் தொடர்ந்து தோன்றிக்கொண்டே இருந்தன. அந்த எண்ணங்களை மறைத்து வைத்து என் வசனங்களை இயல்பாக பேசுவது எனக்கு ஒரு சவாலாகவே இருந்தது” என்று அவர் கூறினார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading