ஏப்ரல் 10ம் தேதி வெளியாகும் செல்வராகவனின் ‘மனிதன் தெய்வமாகலாம்’ திரைப்படம்!

விஒய்ஓஎம் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வரும் ‘மனிதன் தெய்வமாகலாம்’ திரைப்படத்தை இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கி வருகிறார். இவர் இதற்கு முன்பு ‘டிரிப்’ மற்றும் ‘தூக்குத்துரை’ போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். தற்போது இயக்குநராக இருந்து நடிகராக மாறியுள்ள செல்வராகவன் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் குஷி ரவி, ஒய்ஜி மகேந்திரன், கௌசல்யா, கௌசி ரவி மற்றும் மைம் கோபி உள்ளிட்ட பலரும் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

இயற்கையின் அமைதியும் அழகும் சூழ்ந்த ஒரு கிராமத்தில் நிகழும் துயரமான சம்பவம் அந்த கிராமத்தின் ஒற்றுமையை சிதைக்கிறது. அந்த துயரத்தை தாண்டி மக்கள் மனவலிமையுடன் எதிர்கொண்டு போராடும் சூழலில், தனது கிராமத்தை காப்பாற்ற ஒரு மனிதன் எடுக்கும் துணிச்சலான முடிவு, அந்த மனிதனை அங்கு தெய்வம் போன்று உயர்த்துகிறது. இதனை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த கதைதான் ‘மனிதன் தெய்வமாகலாம்’ என்ற தலைப்பை பெற்றுள்ளது. இந்த திரைப்படத்திற்கு ஏ.கே. பிரியன் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் இந்த திரைப்படத்தின் டீசரை நடிகர் தனுஷ் வெளியிட்டார். இந்த டீஸர் ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்நிலையில் செல்வராகவன் நடித்துள்ள ‘மனிதன் தெய்வமாகலாம்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading