தமிழக முதல்வர் மு‌.க.ஸ்டாலினின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறதா?

இயக்குநராக தனது பயணத்தை தொடங்கிய சமுத்திரக்கனி பின்னர் நடிகராகவும் பெரும் வரவேற்பைப் பெற்றார். இயக்குநராக அவ்வப்போது திரைப்படங்களை உருவாக்கினாலும், நடிகராக பல படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த ‘தடயம்’ வெப் தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்கும் முயற்சியில் சமுத்திரக்கனி ஈடுபட்டு வருகிறார். இதற்காக ஸ்டாலின் தொடர்பான பல்வேறு தகவல்கள் மற்றும் ஆவணங்களை அவர் சேகரித்து வருகிறார். மேலும் ஸ்டாலினின் நெருங்கிய நண்பர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரை நேரில் சந்தித்து அவர்களின் நினைவுகள் மற்றும் அனுபவங்களை பதிவு செய்து வருகிறார்.

இந்த அனைத்து தகவல்களையும் அடிப்படையாக கொண்டு திரைக்கதை உருவாக்கப்பட்ட பிறகு ஸ்டாலினின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்ட திரைப்படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளார். அந்த படத்தில் ஸ்டாலின் கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனியே நடிப்பார் என்றும் கூறப்படுகிறது. இந்த கதை உருவாக்க பணியில் சமுத்திரக்கனியின் நண்பரும் இயக்குநருமான போஸ் வெங்கட் உதவி செய்து வருவதாக அவர் சமீபத்தில் தெரிவித்தார். இந்த திரைப்படத்தை 2027ஆம் ஆண்டில் தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading